அரசு பெண் ஊழியரிடம் 5½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

அரசு பெண் ஊழியரிடம் 5½ பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2023-08-23 20:54 GMT

திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (40). இவர் திருச்சி அண்ணா விளையாட்டு மைதான அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் இவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஸ்ரீரங்கம் அருகே கொண்டையம்பேட்டை பாலத்தில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்