மூங்கில்துறைப்பட்டு,
வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் ஆனைமடுவு, புளியங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது பல்வேறு இடங்களில் தனித்தனியாக சாராயம் விற்றதாக மூலக்காடு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 49), ஆனைமடுவு ஆனந்தன் (28), புளியங்கோட்டைபிரபு (31), ஏழுமலை ( 34) மற்றும் கொடியனூர் வெள்ளையன் ( 40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 500 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.