தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த 5 பேர் கைது

தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த 5 பேர் கைது

Update: 2023-05-18 20:12 GMT

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள கூகூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழழகன் (வயது27), ரவிச்சந்திரன் (28), பாண்டியன் (29),மகேஷ்பாபு (38), பவித்ரன் (27) இவர்கள் 5 பேரும் குடவாசல் மணக்காலில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவிடைசேரியில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பஸ்,இவர்களுக்கு வழிவிடவில்லை என்று ஆலத்தூர் ரோடு பஸ் நிறுத்தம் அருகே மறித்தனர். பின்னர் அவர் தனியார் பஸ் கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு கண்டக்டர் அருண்குமாரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த அருண்குமார் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழழகன், ரவிச்சந்திரன், பாண்டியன், மகேஷ்பாபு, பவித்ரன், ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்