5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்;
சேலம்:-
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் உதயசங்கர். இவரை முன்விரோதம் காரணமாக ஓமலூர் காமலாபுரம் நடுத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 24) மற்றும் அவரது கூட்டாளிகளான ஆனந்த், விக்கி என்கிற விக்னேஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் சேர்ந்து கடந்த மாதம் கொலை செய்தனர். மேலும், கடந்த 2021-ம் ஆண்டு நீதிமன்ற காவலுக்கு சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கடந்த ஆண்டு பணத்திற்காக ஆள்கடத்தலில் ஈடுபட்டதாகவும் பன்னீர்செல்வம் மீது ஓமலூர் மற்றும் ஆத்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதவிர, ஆள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆனந்த் மீது ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
சேலம் சிவதாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், அதேபகுதியை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக டவுன் அனைத்து மகளிர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்தனர். கொலை, ஆள்கடத்தல், பாலியல் தொல்லை போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பன்னீர்செல்வம், ஆனந்த், விக்கி என்கிற விக்னேஷ்குமார், சந்தோஷ்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பள்ளப்பட்டி மற்றும் டவுன் அனைத்து மகளிர் போலீசார் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், அவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நேற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.