ஆரல்வாய்மொழி அருகே இறந்த காட்டு பன்றியை பங்குபோட்ட 5 வட மாநில தொழிலாளர்களுக்கு அபராதம்

ஆரல்வாய்மொழி அருகே இறந்த காட்டு பன்றியை பங்கு போட்ட வட மாநில தொழிலாளர்கள் 5 பேருக்கு வன அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.;

Update:2022-09-14 00:21 IST

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே இறந்த காட்டு பன்றியை பங்கு போட்ட வட மாநில தொழிலாளர்கள் 5 பேருக்கு வன அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

காட்டு பன்றி

பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட ராஜாவூர் அருகே தெற்குமலை காட்டின் மேற்கு பகுதியில் உள்ள சகுந்தலா மலையின் பின்புறம் சூட்டு பொத்தை பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து மாவட்ட உதவி பாதுகாவலர் சிவகுமார், பூதப்பாண்டி வனசரகர் ரவீந்திரன், வனக்காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, முத்துராமலிங்கம், வேட்டைதடுப்பு காவலர்கள் ஜெகன், சிவா ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று பார்த்தனர்.

அபராதம்

அப்போது மலை அடிவாரத்தில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்யும் மேற்குவங்கத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் ஒரு காட்டு பன்றியை உறித்து பங்குபோட்டு கொண்டிருந்தனர். பன்றி இறைச்சியுடன் 5 வாலிபர்களையும் வனத்துறையினர் பிடித்து ஆரல்வாய்மொழியில் உள்ள வனசரக அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் இறந்துகிடந்த பன்றியை பங்குபோட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வனஉயிரின குற்றத்திற்காக மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்பேரில் வட மாநில தொழிலாளர்கள் 5 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்