5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கம்பத்தில் 5 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கம்பம் சுங்கம் தெருவை சேர்ந்தவர் தமீஜ் அகமது (வயது 22). இவர் ஏ.கே.ஜி. திடல் அருகே பீடா கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு சாக்கில் 5 கிலோ 200 கிராம் புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமீஜ் அகமதுவை கைது செய்தனர்.