சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 கிலோ குட்கா பறிமுதல் - வாலிபர் கைது

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 கிலோ குட்கா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-06 07:17 GMT

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காத்திருப்பு அறையில் சந்தேகப்படும் படியாக ஒருவர் அமர்ந்து இருப்பதை போலீசார் கண்டனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் 5 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் மத்தியபிரதேச மாநிலம் மத்தனபாடு பகுதியை சேர்ந்த தனராம் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பறிமுதல் செய்த குட்காவை போதைபொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்