5 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
அம்பையில் குடிநீர் கட்டணம் செலுத்தாததால் 5 குடிநீர் இணைப்புகளை நகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர்.;
அம்பை:
நகராட்சிகளின் மண்டல இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் அம்பை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் உத்தரவின்படி நகராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 5 குடிநீர் இணைப்புகளை நகராட்சி குடிநீர் திட்ட பணியாளர்கள் துண்டித்தனர். மேலும் நகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கிகளை பொதுமக்கள் உடனடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக பாக்கி உள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு தொடரும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.