கோத்தகிரியில் 5 செ.மீ. மழை பதிவானது

கோத்தகிரியில் 5 செ.மீ. மழை பதிவானது

Update: 2022-10-10 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. நேற்று லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண காலநிலை நிலவியது. இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கோத்தகிரியில் அதிகபட்சமாக 51 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கோடநாட்டில் 46 மில்லி மீட்டர், கீழ் கோத்தகிரியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்