இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் பா.ஜனதாவை சேர்ந்த 5 பேர் கைது

இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் பா.ஜனதாவை சேர்ந்த 5 பேர் கைது;

Update:2022-10-21 19:04 IST

பல்லடம்

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்த பாலன் மகன் ராஜசேகர்(வயது 24). இந்து முன்னணி நிர்வாகி. இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியில் சென்றார். அப்போது இவரை அதே பகுதியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி குருமூர்த்தி(38) என்பவர் வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் குருமூர்த்திக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் புகழேந்தி (22), அபிஷேக் (21), சந்தோஷ் (21), கிருஷ்ணன் (23) ஆகியோர் வந்து ராஜசேகரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்