4-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 4-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-04-01 19:16 IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு மூடி வைக்க வேண்டும் என மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்நாளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்