சாராயம்- குட்கா விற்ற 49 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் மற்றும் குட்கா விற்ற 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீஸ் சூப்பிரண்டு மீனா தெரிவித்தார்.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் மற்றும் குட்கா விற்ற 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீஸ் சூப்பிரண்டு மீனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
49 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 28, 29-ந்தேதிகளில் மாவட்ட போலீஸ் துறையினரால் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 885 லிட்டர் சாராயம், 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 9 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
தகவல் தெரிவிக்கலாம்
தொடர்ந்து சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் பற்றி புகார் அளிக்க போலீஸ் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 96261-69492 எண்ணில் தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.