48.79 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்-அதிகாரி தகவல்

48.79 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-12-22 21:37 GMT

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மின்பகிர்மான வட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அனைத்து பிரிவு அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேலப்பாளையம் பிரிவு-2 அலுவலகத்திற்கு உட்பட்ட அம்பை சாலையில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமை மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி நேற்று ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறும்போது, நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 347 மின் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து உள்ளனர். இது 45.12 சதவீதமாகும். அதே போல், நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகத்திலும் நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 23 பேர் ஆதார் எண்ணை மின்இணைப்பு எண்ணுடன் இணைத்து உள்ளனர். இது 48.79 சதவீதமாகும், என்றார்.

மேலும் மீதியுள்ள மின்நுகர்வோர் விரைவில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க ஆலோசனை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்