பூண்டி ஏரிக்கு 450 கன அடி தண்ணீர் வருகை

மழையால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் வருகிறது.

Update: 2022-11-25 09:30 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளில் நீர் இருப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2 டி.எம்.சி. தாண்டி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். நேற்றய நிலவரப்படி 2.023 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வினாடிக்கு 450 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியில் இருந்து பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 53 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி ஆகும். இதில் 2.503 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 192 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டி.எம்.சி. ஆகும். 457 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வினாடிக்கு 257 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி 3.645 டி.எம்.சி. உள்ளது. வினாடிக்கு 139 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் 139 கன அடி உவரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே போல் கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 500 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்