வீட்டில் 45 பவுன் தங்கம்-நகை கொள்ளை

வீட்டில் 45 பவுன் தங்கம்-நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-27 21:57 GMT

மலைக்கோட்டை:

காசிக்கு சென்றார்

திருச்சி கோட்டை போலீஸ் நிலைய பகுதியில் உள்ள சஞ்சீவி நகர் அப்துல் கலாம் தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 47). இவர் கடந்த 20-ந் தேதி தனது 2 மகள்கள், ஒரு மகனுடன் காசிக்கு சென்று விட்டார். சந்திரனின் மாமியார் மனோன்மணி, மற்றொரு மகள் பிரதிக்ஷா ஆகியோர் காசிக்கு போகவில்லை என்று தெரிகிறது.

இதற்கிடையே நேற்று முன் தினம் மாலை சுமார் 6 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு மனோன்மணியும், பிரதிக்ஷாவும் மனோன்மணியின் மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று மாலை சுமார் 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது.

நகைகள் கொள்ளை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த சொக்க தங்கம் 200 கிராம்(25 பவுன்) மற்றும் 20 பவுன் நகையை காணவில்லை. இது பற்றி அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டை குற்றப்பிரிவு போலீசார், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்