விதிகளை மீறி இயங்கிய 44 நிறுவனங்களுக்கு அபராதம்

குடியரசு தினத்தன்று விதிகளை மீறி இயங்கிய 44 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-01-27 18:45 GMT

விழுப்புரம்:

நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு அரசால் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் விடுமுறை நாளன்று பணிபுரியும் வகையில் இரட்டிப்பு சம்பளம் மற்றும் மாற்று விடுப்பு வழங்கப்படும் என தெரிவித்து நிறுவனங்களில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனரா என்பது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்ளில் தேசிய விடுமுறை தினமான நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

44 நிறுவனங்களுக்கு அபராதம்

இக்குழுவினர் 87 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகள், நிறுவனங்களில் 32 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 8 முரண்பாடுகளும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் ஆக மொத்தம் 44 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

மேலும் தமிழில் பெயர் பலகை இல்லாத நிறுவனங்கள் தொடர்பாக சிறப்பாய்வு மேற்கொண்டதில் 40 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இவ்வாறு முரண்பாடு கண்டறியப்பட்ட நிறுவனங்களின் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்