புத்தக கண்காட்சியை ஒரே நாளில் 4,300 மாணவர்கள் பார்வையிட்டனர்
திருப்பத்தூரில் நடந்த புத்தக கண்காட்சியை ஒரே நாளில் 4,300 மாணவர்கள் பார்வையிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் இலக்கியத் திருவிழா மற்றும் புத்தககண்காட்சி தூயநெஞ்சகல்லூரியில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட 48 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 4,300 மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் புத்தகங்களை வாங்கினர்.
கலெக்டர் அமர் குஷ்வாகா தலைமையில் நடந்த 3-வது நாள் நிகழ்ச்சியில் இலக்கிய இயக்கங்கள் என்ற தலைப்பில் கிருஷ்ணன், துரை.சந்திரசேகரன், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோரும், இளைஞர்களும் இலக்கியமும் என்ற தலைப்பில் பேராசிரியர்கள் ரவிக்குமார், ஸ்ரீ நேசன், சந்தோஷ் ஆகியோரும் பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தாசில்தார் சிவப்பிரகாசம், பேராசிரியர் பார்த்திபராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.