ஆசிரிய தம்பதி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

பாப்பாரப்பட்டியில் ஆசிரிய தம்பதி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை போனது. காரில் வந்து மூதாட்டியை ஏமாற்றி கைவரிசை காட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-09-27 01:00 IST

பாப்பாரப்பட்டி:-

பாப்பாரப்பட்டியில் ஆசிரிய தம்பதி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை போனது. காரில் வந்து மூதாட்டியை ஏமாற்றி கைவரிசை காட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசிரிய தம்பதி

பாப்பாரப்பட்டி பென்னாகரம் மெயின் ரோட்டில் அப்புமுதலி தெருவை சேர்ந்தவர் சிவசேகர் (வயது 52). கம்மாளப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர், கவுரிசெட்டிபட்டி அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல் சிவசேகரும், அவருடைய மனைவி ஜெயந்தியும் வேலைக்கு சென்று விட்டனர். சிவசேகரின் தாய் பெருமா (76) மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மதியம் 2 மணிக்கு கார் ஒன்று வந்தது.

காரில் வந்த பெண்

காரில் இருந்து 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆசிரியர் சிவசேகர் வீட்டுக்கு வந்துள்ளார். அந்தப் பெண் ஒரு பையில் பழங்களை வாங்கிக் கொண்டு மூதாட்டி பெருமாவிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.

அவரது உறவினர் என்று சொல்லி அவருக்கு பழங்களை கொடுத்து விட்டு வெளியே செல்வது போல் சென்று மீண்டும் வீட்டுக்குள் சென்றுள்ளார். மூதாட்டி பெருமா ஏமாந்த நேரத்தில் வீட்டில் இருந்த பீரோ சாவி வைத்த இடங்களை நோட்டமிட்டுள்ளார்.

40 பவுன் நகை

தேடிப்பிடித்து சாவியை எடுத்து பீரோவை திறந்து சுமார் 40 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார். மாலையில் வீடு திரும்பிய ஆசிரியர் சிவசேகர், அவருடைய மனைவி ஜெயந்தி ஆகியோர் பீரோ திறந்து கிடப்பதையும், பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தாயார் பெருமாவிடம் விசாரித்த போது வீட்டை நோட்டமிட்ட பெண், நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆசிரியர் சிவசேகர் பாப்பாரப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

பட்டப் பகலில் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் மூதாட்டி கவனத்தை திசை திருப்பி நகை திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்