திருச்சி மாவட்டத்தில் 17 பதவிகளுக்கு 40 பேர் மனுதாக்கல்

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 17 பதவிகளுக்கு 40 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2022-06-27 20:33 GMT

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 17 பதவிகளுக்கு 40 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்

திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை காலியாக உள்ள கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பதவிகளுக்கு வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. மனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 30-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்படும். ஜூலை 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 பதவியிடங்களில் துறையூர் ஒன்றிய கவுன்சிலருக்கு 7 பேரும், மருங்காபுரி ஒன்றியம் பளுவஞ்சி ஊராட்சி தலைவருக்கு 4 பேரும், லால்குடி சாத்தமங்கலம் ஊராட்சி தலைவருக்கு 2 பேரும், அந்தநல்லூர் ஒன்றியம் அல்லூர் வார்டு உறுப்பினருக்கு 4 பேரும், திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி வார்டு உறுப்பினருக்கு ஒருவரும், மணப்பாறை ஒன்றியத்தில் எப்.கீழையூர் வார்டு உறுப்பினருக்கு ஒருவரும், புத்தாநத்தம் வார்டு உறுப்பினருக்கு 3 பேரும், லால்குடி ஒன்றியம் அரியூர் வார்டு உறுப்பினருக்கு 2 பேரும், புள்ளம்பாடி ஒன்றியம் நெய்குளம் வார்டு உறுப்பினருக்கு ஒருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

40 பேர் மனுதாக்கல்

இதேபோல் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் தீராம்பாளையம்-2வது வார்டு உறுப்பினருக்கு 2 பேரும், தீராம்பாளையம்-3வது வார்டு உறுப்பினருக்கு 2 பேரும், தீராம்பாளையம்-5 வது வார்டு உறுப்பினருக்கு 2 பேரும், தீராம்பாளையம்-6 வது வார்டு உறுப்பினருக்கு 3 பேரும், தீராம்பாளையம்-8வது வார்டு உறுப்பினருக்கு 2 பேரும், தொட்டியம் பிடாரமங்கலம் வார்டு உறுப்பினருக்கு ஒருவரும், தா.பேட்டை சிட்டலரை வார்டு உறுப்பினருக்கு 2 பேரும், துறையூர் ஒன்றியம் கொட்டையூர் வார்டு உறுப்பினருக்கு ஒருவரும் என 17 பதவிகளுக்கு மொத்தம் 40 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்