கொலை, கொள்ளையில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை கொள்ளையில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-09 19:30 GMT

மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 36), மேட்டூர் ஜீவாநகர் மூர்த்தி (29), நாட்டாமங்கலம் பிரகாஷ் (30) மற்றும் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பை சேர்ந்த நிவாஷ் (30). இவர்கள் 4 பேர் மீது மேட்டூர், கருமலைக்கூடல் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, தொடர் வழிப்பறி வழக்குகள் உள்ளன. தொடர்ந்து அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மேட்டூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பேரில் கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வெள்ளையன் உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று கலெக்டர் கார்மேகம் உத்தரவின் பேரில் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்