சாராயம் விற்ற 4 பேர் கைது
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி (வயது 21) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் (21), குளத்தூர் மாரிமுத்து (49) அரசம்பட்டு செல்வி (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.