மண்ணிவாக்கம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 4 பேர் கைது

மண்ணிவாக்கம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.;

Update:2023-08-25 14:34 IST

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கூட்ரோடு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மண்ணிவாக்கம் ராம்நகர் பகுதியை சேர்ந்த ராஜதுரை (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதே போல சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பனை செய்த மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ரவி (52) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பொன் காமேஸ்வரன் (37) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். ஊரப்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற அய்யஞ்சேரி பாரதி நகர் பகுதியை சேர்ந்த மனோகரன் (53) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்