அரிவாளுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது
அரிவாளுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சிவகாசி,
சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் காந்திரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த 3 பேர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். இதை கண்ட போலீசார் அந்த 3 பேரையும் மடங்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சிவகாசி நடராஜர் காலனியை சேர்ந்த மகேந்திரன் (வயது 24), மகேந்திரகுமார் என்கிற குள்ளமணி (23), சிவகிரி (20) என்பதும் அய்யனார்காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரை பழிவாங்க அரிவாளுடன் வந்ததும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் இலக்கியமுத்து வெம்பக் கோட்டை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வெள்ளை சாமியார் தெருவை சேர்ந்த தேவிலால் மகன் தினேஷ்குமார் (24) என்பவர் அரிவாளுடன் சுற்றி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.