மதுவிற்ற பெண் உள்பட 4 பேர் கைது

முத்துப்பேட்டை பகுதியில் மதுவிற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-28 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை பகுதியில் மதுவிற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிரடி சோதனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பலரை கைது செய்தனர்.

4 பேர் கைது

இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுபானம் விற்ற முத்துப்பேட்டையை அடுத்த விளாங்காடு சமத்துவபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மகன் பரத்குமார் (வயது20), தம்பிக்கோட்டை கீழக்காடு தெற்குதெருவை சேர்ந்த சிதம்பரம் மகன் கணேசன் (30), தில்லைவிளாகம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்த இளவரசன் மனைவி வசந்தி (35), இடும்பாவனம் காலனி தெருவை சேர்ந்த கண்ணன் (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்