கஞ்சா விற்ற வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது
கஞ்சா விற்ற வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் வாங்கல் பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே காட்டுப்பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பஞ்சனன் (வயது 34), எத்திரஸ் (26), ஹரிதாஸ் (40), மனோஜ் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.