முன்னாள் ராணுவ வீரரை கத்தியால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது

முன்னாள் ராணுவ வீரரை கத்தியால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-10-20 22:27 IST

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயத 46), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கவிதா.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கடந்த 1½ ஆண்டுகளாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாரிமுத்துவை, 3 பேர் கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் கவிதாவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கவிதா, தனது கள்ளக்காதலன் செட்டித்தாங்கலை சேர்ந்த சங்கர் என்பவருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் திட்டியதும், இதற்காக சிறுமூர் பாபு என்கிற திருமாலன், அடையபுலம் பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 3 பேரை அழைத்து வந்து, மாரிமுத்துவை கொலை செய்ய ரூ.5 லட்சம் தருவதாக பேசியதும் தெரியவந்தது.

இதனையடுத்து சங்கர், கவிதா, பாபு, பிரகாஷ்ராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அப்புவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்