ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது;

Update:2023-10-26 03:33 IST

பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை கைது செய்ய பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினிக்கு உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விசாரணையில், 'பவானியை அடுத்த ஜம்பை பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்றது,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகானந்தத்தை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகானந்தம் கொடுத்த தகவலின் பேரில் பவானியை சேர்ந்த எம்.ஜி.நாத், குமரன், பிரபு ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையதாக 2 பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்