மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-04-20 03:03 GMT

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. சரியாக நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரி, கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரிகளில் வைக்கப்படும். இந்த இடங்களில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. பின்னர் அந்த பிரச்சினை உடனே சரி செய்யப்பட்டது"இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்