திருமயம் அருகே விபத்தில் 4 பேர் படுகாயம்

திருமயம் அருகே விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-03-30 18:52 GMT

திருமயம் அருகே உள்ள முனசந்தை ஆவுடையப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 51). காடத்தான்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (40). இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பாப்பாவயல் கிராமத்திலிருந்து ஆண்டிபட்டி நோக்கி திருமயம்- ராயவரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்வமணி பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன், சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதேபோல் மதுரை வண்டியூரை சேர்ந்தவர்கள் ராஜாங்கம் (56), ரகு (54). இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடியாப்பட்டியில் இருந்து திருமயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜாங்கம், ரகு ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்