ராமஜெயம் கொலை வழக்கு; முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் தொடர்புடையவரிடம் விசாரணை
ராமஜெயம் கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.;
சென்னை,
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ந்தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். திருச்சி தில்லைநகரில் நடந்த இந்த கொலை வழக்கில் பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இதனிடையே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவையடுத்து ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 50 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ராமஜெயம் வழக்கில் யாரேனும் துப்புகொடுத்தால் 50 லட்ச ரூபாய் சன்மானம் அள்இக்க
இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கில் 4 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கலை சேர்ந்த கணேசன், புதுக்கோட்டை சேர்ந்த செந்தில்குமார் உள்பட 4 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வருவதாகவும் விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என்று சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது.