அங்கன்வாடியில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து 4 குழந்தைகள் காயம்

திருவெண்ணெய்நல்லூரில் அங்கன்வாடியில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து 4 குழந்தைகள் காயமடைந்தனர்.;

Update:2022-09-07 00:18 IST

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெநல்லூர் வி.கே.எஸ். நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரை பெயர்ந்து அங்கிருந்த குழந்தைகள் மீது விழுந்தது. இதில் அப்ரின் (வயது 3), ரித்திகா (3) முனிஸ்ரீ, சகானாஸ்ரீ ஆகிய 4 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களது பெற்றோரிடம் ஆறுதல் கூறினர். தொடர்ந்து அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சும் கணேசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்