பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-07-30 22:05 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் 4 பேர் சூதாடிக்கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், 'அவர்கள் சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த சாந்தகுமார் (வயது 43), வினோத் (38), சுதாகர் (40), மற்றொரு வினோத் (63) என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.800-யும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்