கொலையான திருச்சி ரவுடியின் கூட்டாளிகள் 4 பேர் கைது

கொலையான திருச்சி ரவுடியின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்ளுக்கு வெவ்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது.;

Update:2022-12-16 00:07 IST

ரவுடி வெட்டிக்கொலை

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 31). பிரபல ரவுடியான இவர், மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர், கடந்த 12-ந்தேதி புதுக்கோட்டையில், ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கோர்ட்டில் கைெயழுத்திட்டு விட்டு தனது நண்பர்கள் 4 பேருடன் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தார்.

புதுக்குளம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் இவர்களை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் இளவரசனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இளவரசனுடன் வந்த 4 நண்பர்களும் தப்பியோடி விட்டனர். இதுதொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேடும் பணி தீவிரம்

இந்நிலையில் இளவரசனுடன் வந்த அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் பிடித்து சென்று தொடர்ந்து 3 தினங்களாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளியை பிடிப்பதற்காக 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. தனிப்படைகளும் தீவிரமான முறையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆதாரமாக கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

4 பேர் கைது

இளவரசன் நண்பர்கள் 4 பேரிடமும் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நேற்று முன்தினம் நள்ளிரவு கணேஷ் நகர் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்