3-ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை விழா மேடையிலேயே நிறைவேற்றிய முதல்-அமைச்சர்

3-ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை விழா மேடையிலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார்

Update: 2022-12-08 18:45 GMT

ெதன்காசியில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமி ஒருவரின் கோரிக்கையையும் விழா ேமடையிலேயே நிறைவேற்றினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "வினைதீர்த்தநாடார்பட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளியில், 3-ம் வகுப்பு படிக்கக்கூடிய ஆராதனா எனும் குழந்தை, சமீபத்தில் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில். தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டு இருந்தார். பாருங்கள் ஒரு குழந்தை எழுதியிருக்கிறது. அந்த கடிதத்தை படித்ததும் எனக்கு பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் இந்த கடிதம் எழுதி இருப்பார் என நான் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்த கூட்டத்தில் இப்போது நான் அறிவிக்கிறேன். அதற்கு முதற்கட்டமாக, ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு சிறு வயதிலேயே நம்பிக்கையோடு எனக்கு கடிதம் எழுதிய அந்த குழந்தை ஆராதனா, அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று அந்த குழந்தையை மீண்டும் நான் வாழ்த்துகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்