கோவை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி தங்கம் பறிமுதல்

ஷார்ஜாவில் இருந்து கடத்தி வந்த ரூ.3.8 கோடி தங்கத்தை கோவை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைதானார். 10 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2023-03-11 18:45 GMT

பீளமேடு

ஷார்ஜாவில் இருந்து கடத்தி வந்த ரூ.3.8 கோடி தங்கத்தை கோவை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைதானார். 10 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ரகசிய தகவல்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற நாடுகள்,மாநிலங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஷார்ஜாவில் இருந்தும் கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் அதிகாலை ஒரு விமானம் வந்தது. அதில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை உஷார்படுத்தினர்.இதையடுத்து ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை உளவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில்சந்தேகத்துக்குரிய 11 பயணிகளைஅதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்ட போது அவர்கள் தங்களின் பேண்ட் பைகள், காலணிகள் மற்றும் மலக்குடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பயணிகளிடம் இருந்து மொத்தம் 6.62 கிலோ தங்க நகைகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.3.8 கோடி.

ஒருவர் கைது

இந்த சோதனையில் ½ கிலோவுக்கும் அதிகமான தங்க நகை களை கடத்தி வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜூன் (வயது 43) என்பவரை மட்டும் அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 10 பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்