கடந்த 5 நாட்களில் 37 ஆயிரத்து 511 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
சென்னையில் காலையில் 23 ஆயிரம் பேரும், இரவில் 19 ஆயிரம் பேரும் வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.;
சென்னை,
'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. அதில், வேளச்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, முகலிவாக்கம், கொரட்டூர், போரூர், வளசரவாக்கம், ஆலப்பாக்கம், மாதவரம், மாத்தூர், வியாசர்பாடி, தண்டையார்பேடடை, மணலி, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி, கொடுங்கையூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது.
இப்பகுதிகளில் வெள்ளம் வடியாதால் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். சென்னையில் காலையில் 23 ஆயிரம் பேரும், இரவில் 19 ஆயிரம் பேரும் வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், பள்ளிக்கரணை, முடிச்சூர், பெரும்பாக்கம், தரமணி, வேளச்சேரி உள்பட தாழ்வான பகுதிகளில் கூடுதல் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்தது. புறநகர் பகுதிகளில் மட்டுமே தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை முழுவதும் கடந்த 6-ந்தேி முதல் 10-ந்தேதி வரை 37 ஆயிரத்து 511 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதது.