மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 36 பேர் காயம்

கே.வி.குப்பம் அருகே நடந்த மாடுவிடும் விழாவில் காளைகள் முட்டி 36 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-01-17 13:18 GMT

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே நடந்த மாடுவிடும் விழாவில் காளைகள் முட்டி 36 பேர் காயமடைந்தனர்.

மாடுவிடும் விழா

கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை அடுத்த கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு தீ அணைப்பு, மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஓடுபாதையின் இருபுறங்களிலும் சவுக்குக் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்து இருந்தனர்.

முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.80 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.65 ஆயிரம், என மொத்தம் 60 பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. போட்டிகளுக்காக கொண்டு வரப்பட்ட 148 மாடுகளில் 4 மாடுகள் தவிர 144 மாடுகள் போட்டிகளில் பங்கேற்றன.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் சங்கர், வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், கண்ணன், கிராமநிர்வாக அலுவலர்கள், கால்நடைத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் போட்டிகளைக் கண்காணித்தனர்.

36 பேர் காயம்

சீறிப்பாய்ந்து ஓடியபோது மாடுகள் முட்டியதில் 36பேர் காயமடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டனர்.

31 பேர் அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர்.

விழா ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்