சென்னையில் ஒரே வாரத்தில் 34 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு; கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னையில் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 34 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2023-10-20 18:28 IST

சென்னையில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 34 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் வேலழகி என்ற பெண் குற்றவாளியும் இடம் பெற்றுள்ளார். இந்த ஆண்டு இதுவரை 493 குற்றவாளிகள் மீது குண்டர் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்