34 விநாயகர் சிலை பிரதிஷ்டை

கடையநல்லூர், சொக்கம்பட்டியில் 34 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Update: 2023-09-19 19:00 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு மேலக்கடையநல்லூர் பூங்கா அருகில் நின்ற நிலையில் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் அங்குள்ள கண்ணார் தெருவில் பரமசிவன் போல விநாயகர் சிலையும், கிருஷ்ணாபுரத்தில் மகாராஜா கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நிர்வாகிகள் கண்ணா பாண்டியன், கல்யாணி, கார்த்திக் செல்வன், பரத், காசி, ரமேஷ், கார்த்திக், மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

மேலும் முத்துக்கிருஷ்ணாபுரத்தில் பாரத விநாயகர் சிலை, கரியமாணிக்க பெருமாள் கோவிலில் 1,001 தேங்காய் மூலம் வெற்றி கொண்டான் விநாயகர் சிலை, மாவடிக்கால் காளியம்மன் கோவில், வடக்குவாசெல்வி அம்மன் கோவில், மறுகால்தெரு, கற்பக விநாயகர் கோவில் தெரு, கொழும்பு தெரு, திலகர் தெரு, சேனை செக்கடி விநாயகர் கோவில் தெரு, கீழமந்தை, மேலமந்தை, பாலவிநாயகர் கோவில் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 31-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதுபோன்று கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் 3 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடையநல்லூர், சொக்கம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள அனைத்து சிலைகளும் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் மேல கடையநல்லூர் தாமரைக்குளத்தில் கரைக்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்