சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தைக்கு 31 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மகனுக்கு உடந்தையாக செயல்பட்ட தந்தைக்கு 31 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.

Update: 2023-10-26 06:26 GMT

திருவலாங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் டில்லிபாபு (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். டில்லிபாபுவிற்கு அவரது தந்தை ஏழுமலை (53) உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் டில்லிபாபு, ஏழுமலை ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் டில்லிபாபுவிற்கு 31 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்தது. அதில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் உடந்தையாக செயல்பட்ட தந்தை ஏழுமலைக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஏழுமலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மகன், தந்தை இருவருக்கும் 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்