செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா - தமிழக அரசு அரசாணை

செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2022-12-30 10:29 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடம்பூரில் 138 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரியவகை தாவர இனங்களை பாதுகாக்க தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ராயல் தாவரவியல் பூங்கா, கியூ தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்