ஒரே நாளில் மது வழக்குகளில் 30 பேர் கைது

நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் மது வழக்குகளில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-27 18:45 GMT

நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் மது வழக்கு களில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

30 பேர் கைது

நாகை மாவட்டத்தில் நேற்று தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டது. இந்த ஒரு நாள் மட்டும் மது வழக்குகளில் 30 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 32.5 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், 632 மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

இதுபோன்ற மதுகடத்தல் மற்றும் விற்பனை போன்றவை தொடர்ந்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மது கடத்தலில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

9498181257 என்ற செல்போன் எண்ணில் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்