மது விற்ற 3 வாலிபர்கள் கைது

மது விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-18 23:30 IST

அன்னவாசல் அருகே அண்ணாபண்ணை பகுதியில் மது விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டாமின் குடியிருப்பு பகுதியில் மது விற்ற வயலோகத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேேபால் வயலோகம் பஸ் நிறுத்தம் பகுதியில் மது விற்ற முத்துக்குமார் (24), சீகம்பட்டி உப்புபாறை பகுதியில் மது விற்ற கவியரன் (23) ஆகிய 2 பேரையும் அன்னவாசல் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்