கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-09 19:18 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் அரங்கனேரியில் சந்தேகப்படும் வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், கல்லாத்தூர் வடவீக்கம் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணனின் மகன் விமல்ராஜ்(வயது 28), ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்த சின்னசாமியின் மகன் சிவச்சந்திரன்(27), ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருைவ சேர்ந்த பஜருல்லாவின் மகன் முகமதுயாசிக் (19) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்