அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

திருப்பத்தூரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-15 19:21 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இருந்து திருப்பத்தூரை நோக்கி வந்த அரசு பஸ்சில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கட்டேரி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் முருகன் (வயது 30) பயணம் செய்துள்ளார். அப்போது இரண்டு பேர் அமரும் இருக்கையில் இவர் படுத்துக்கொண்டு, மற்ற பயணிகளுக்கு இடம் தராமல் இருந்து உள்ளார். இது குறித்து மேல் செங்கம் பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சுதாகர் (30) தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த முருகன் அவரது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் அருகே பஸ் வந்தபோது ஜோலார்பேட்டை கட்டேரி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் குமரேசன் (30), நவீன் குமார் (21), நிர்மல் கமலேஷ் (19) ஆகியோர் காரில் வந்து பஸ்சை மறித்து டிரைவர் சுதாகரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி, டிரைவரை தாக்கிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய முருகனை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்