மின்சாரம் தாக்கி 3 வயது ஆண் குழந்தை பலி
மின்சாரம் தாக்கி 3 வயது ஆண் குழந்தை பலியானது.;
பி.என்.பாளையம் புதூரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி, கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பவித்ரா. இவர்களின் மகன் யோகேஷ் (வயது 3).
பவித்ரா வேலை செய்யும் கோழிப்பண்ணையில் யோகேஷ் விளையாடி கொண்டிருந்தபோது மின்கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.