தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் 3 மாணவர்கள் தேர்வு

மாநில அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-04-23 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 110 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாநில அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வில் அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்வான மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஆயிரம் வீதம் 48 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தேர்வான மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி சால்வை அணிவித்தனர். கடந்த ஆண்டு ஒரு மாணவர் மட்டுமே தேர்வாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு 3 மாணவர்கள் தேர்வாகி உள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்