வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் சக்திவேல், தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த மைக்கேல் டால்டன் மகன் மைக்கேல் அந்தோணி அரவிந்த் (வயது 23), தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த சங்கர் மகன் செல்வகுமார் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டு இருந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்திவேல், மைக்கேல் அந்தோணி அரவிந்த் மற்றும் செல்வகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.