சாராயம் விற்ற 3 பேர் கைது

சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-01-13 00:15 IST

சங்கராபுரம்,

சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது குளத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 42), மூரார்பாளையத்தை சேர்ந்த கருப்பன் (50), விரியூரை சேர்ந்த ரமேஷ் (39) ஆகிய 3 பேரும் தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 200 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்