மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-23 19:06 GMT

குளித்தலை பெரியபாலம் மற்றும் சுங்ககேட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் அந்த பகுதிகளில் மது விற்ற குளித்தலை தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 48), சிவகங்கை மாவட்டம் சித்தானூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (47) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 6 பாட்டில்கள் வீதம் மொத்தம் 12 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.இதேபோல் நச்சலூர் அருேக உள்ள கரைக்களம் இந்திரா காலனி பகுதியில் தனது வீட்டின் பின்புறம் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (55) என்பவரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்